காகித கப்பல்...மனதில் இருக்கும் வலியை
எழுத்தில் வடித்தேன்...
ஒவ்வொரு வரியும்
கண்ணீராய்.....
துளி துளியாய்
சேகரிக்க .....
பெரு வெள்ளம்...
கவிதையில்
தெரிந்தது
என் வலி..
நிம்மதியாய்
திரிந்த காலம்.....
நிர்மூலமாய்
போனது...
நித்தம் ஒரு
கவிதையை
தத்து எடுத்துக்கொண்டு...
மனம்
ஆற்றாமையில்
ஓலமிடுகிறது.....
யாரிடம் சொல்வேன்...
கடை விரித்தேன்...
கொள்வார் இல்லை...
எழிலும் போனது...
அழிய கூடியது தானோ..?
அறிவுக்கு புரிந்தது...
வலியை உணர்ந்தவனுக்கு....
வாழ்க்கை ஒரு
காகித கப்பலாய்....
தண்ணீர்க்கு
இணையாக
என் கண்ணீர்....

0 Response to "காகித கப்பல்..."