சிக்கி முக்கி காதல்...






சிக்கி முக்கி காதல்...

உன் அழகை
பேச பேச
சிக்கி  தவிக்கிறது
வார்த்தைகள்..
உன்னிடம் நான்
தவிப்பதை போல

அடுத்தடுத்து வீடு
அருகருகே வாசல்
அடுக்களை வரை
அவதானிப்பாய்...
அவ்வபோது
அளவெடுத்து பேசுவாய்..
அதிர்வு இல்லாமல்
அன்னமே தோற்று போகும்
அழகிய உன் நடையில்
அதனாலே உன்னை
அதிகமாய் பிடித்து போனது...
அதிலும் நீ தலை சாய
அதிசயிப்பாயே
அன்று தான் உணர்ந்தேன்
அமைதியை  பிடிக்காதவர் எவர்?

இரு விழிகளை 
உருட்டுகிறாயே!!
அப்போது
ஆலையில்
அடிபட்ட
கரும்பாகிறேன் ...
கலகலவென
நீ சிரிக்கையில்
என் உள்ளம்
குலுங்குவது
உனக்கு கேட்கிறதா?
கூட்டமாய்
வந்தாலும்
தனித்து
தெரிவாயே....?
என்னை
கொஞ்சம் கொஞ்சமாய்
உன்பக்கம் இழுக்க
இவைகள் தான்
காரணிகள்....

சிதறி கிடந்த
புத்தகங்களை
சிதறாமல்
நீ எடுத்தாய்...
மொத்தமாய்
சிதறியது
நான் தான்...
உன்னை பார்த்தவாறு
ரோட்டோரத்தில்
தவறி விழுந்தேன்...?

வெளியே கிளம்ப
எத்தனிக்கையில்
அவசரமாய் வந்து ...
அழுத்தி விட்டு செல்வாய்
கைக்குள் மடக்கிய
ரூபாய் தாள்கள்...
காந்தி சிரிப்பதை
பார்த்திருப்பீர்கள்
என்னழுகை
தெரியாது...
அவள் என் பால்
கொண்டுள்ள
அன்பின் பால்...
அவ்வபோது
வரி கட்டுவாள் ....
அவளை பற்றி
வர்ணிப்பதால்...

காதல்
ஒரு விசித்திர நோய்
பார்க்கும் வரை
எதுவும் இல்லை
பார்க்காத போது
பிரளயமே
நடக்கிறது
மண்டை
கூட்டிற்குள்.. .
யோசிக்க
தெரியாத
நானே கூட
யோசிக்க கற்று
கொடுத்தது காதல்
மட்டுமே...

0 Response to "சிக்கி முக்கி காதல்..."