சிறகடிக்கும் எண்ணங்கள்
சிறிது சிறிதாய்.....
கடிவாளம் போடப்பட்ட
எருதாய்.....
சேணம் கட்டப்பட்ட குதிரையாய்....
ஒரு சேர பயணிக்கையில்...
எண்ணிலடங்கா சிதறல்கள்.. .
போய் சேரும் இடம் சரியா...
வாயிற் காப்போன் விடுவானா...
விரட்டி அடிப்பானா..
விடுதியில் இடம் கிட்டுமா...
புதிதாய் சேர்ந்த கல்லூரி
பாடங்கள் எளிதாய் இருக்குமா...
சேக்காளிகள் ஒத்துழைப்பார்களா?
ஒதுக்கி வைப்பார்களா?
ஒன்றும் தெரியாது.....
தேக்கி வைக்கப்பட்ட
புதிர்களுக்கு ....
விடியலில்
விடை காண .....
உங்களை நாடி.....
உச்சி வெயிலில்
வெறும் காலில்
நடக்கையில் ....
சூரியனின் வெப்பம்...
உடம்பை குத்தும்
ஈட்டிகளாய் குளிரின் உச்சம்...
பனிகாலத்தில்...
இவை அனைத்தும்
பழகி போன
உடம்பிற்கு...
அவள் பிரிந்து சென்ற
தினம் முதல்..
அவள் சென்ற திசையை
ஆவலாய் பார்க்கும் கண்களே...
திரும்பி வந்துவிடுவாளா...
மாட்டாளா.....
என சிந்தை கலங்கி...
சிதிலமாகி போனதே...
உடம்பு மரத்து போன
உணர்வுகள்...
இயற்கையை தாங்கும்
சக்தியை கொடுத்த இறைவா....
இதை தாங்கும் சக்தியையும்
கொடுத்திருக்க கூடாதா??