கருவறையில் விதைக்க பட்ட
கல்லறை பயணம் இது...
அஞஞானத்தில்
மெய்ஞானம் காண..
அத்தனையும் மீறி...
பாவத்தில் பாவத்தை
கழுவி...
தேகத்தின் சுத்தம்
புண்ணியங்கள்
அறியா ....
செய்யும் கர்மவினை
திரும்ப திரும்ப
வந்தடையும் ....
சுவற்றில் வீசப்பட்ட
பந்தாய்.....
காற்றில் புதைக்க
முடியாத ....
வினைகள் இது....
புதைந்து போன
ரகசியங்கள்....
யாரறிவார்...
பரம்பொருளை தவிர....
யாருக்கும் தெரியாது
என்றெண்ணி...
செய்யும் செயல்களை ....
சிரித்தவாறே பார்கிறான் ...
பித்தன் ஒருவன்...
கல்லறை போகும் போது...
கணித்து சொல்வான்...
உனக்கிருக்கும்
பிறப்பு குறிப்பு...
பிறவா வரம் கூட...
கிட்டலாம் ...
மனிதனாய் நீ இருந்தால்...
மரணம் கூட
உன்னை வணங்கும்....
தினமும் மலரும்
மலருக்கு தெரியாது...
சூட போவது...
தேவனிடமா....
தேரடியா...
தேவகியா..... இல்லை
மக்கி போகும்
மயானமா...
ஏதும் தெரியாது...
அதை போல் தான்...
வான் மழை பொழியும்
நீர்....
சேரும் இடம் தெரியாது...
பாகுபாடுஇன்றி
பயணம் செய்கிறது...
ஆறறிவு கொண்டு...
ஆற்றல் பல கண்டு....
அனைத்தும் அறிந்த
மானிடா...
நீ மட்டும் ஏன்
பாகு படுத்துகிறாய்
மனதை மாசு
படுத்துகிறாய்...
கீழோன்...மேலோன்...
என
பகுதி பிரித்து
வாழ்கிறாய்...
இருப்பவன் எல்லாம்
மேலோன் என்றால்..
இல்லாதவன் எல்லாம்
கீழோனா......
பிறப்பில் உண்டோ...
இவையெல்லாம்..
இறப்பில் உண்டோ...
இவை அனைத்தும்...
இடுகாடு போகும்போது...
அனைவரும் ஒன்று தான்...
சேமிக்க பட்ட செல்வங்கள் கூட
நிரந்தரம் இல்லை...
மரணம் ...............
சொல்லும் மந்திரம் என்ன...
கட்டி இருக்கும் கோவணம் கூட...
வெட்டியான் உருவி விடுவான்...
அக்னியில் உன்னை
பொசுக்கும் போது
நீ உணர்வதென்ன?
உணராத வரை
நீயும் ஒரு பொணம் தான்.....
ஆறறிவு பெற்ற
மனிதன் கண்டான்
அணுவில் ஒரு ஆபத்து...
ஆனால்...
அவையெல்லாம்
கூட
நிறுத்த முடியவில்லை...
இயற்கையின் சீற்றத்தை...
இப்போதாவது புரிந்து கொள்...
நீ மேலே செல்ல செல்ல...
சேரும் தூரம்
மிக அருகில் ...