ஆகாயம் நிலத்தில் வீழ்ந்தது -
அதுவே கடலாய் ஆனது....!
கடலை சுற்றி பாதுகாவலாய் 
கரைகள் - கடற்கரைகள் 
அந்தி சாயும் பொழுதிலோ 
அதிகாலை பொழுதிலோ 
சுத்தமாக சுவாசிக்க வாருங்களேன் - 
சுனாமி வரும் என்ற பயம் இருந்தால் 
சொல்லிவிட்டு வாருங்கள் - 
ஈர காற்று மிதமாய் வீச 
காற்றில் ஆடை படபடக்க 
அழுத்தமாய் கால் பதியுங்கள் -
நடையும் கூட சுகமாய் தெரியும்-
காலாற நடப்பது கடற்கரையில் 
பிரியமாய் நடக்க கூட 
பிடித்தமானவர்கள் இருந்தால் 
இன்னும் சுகம் தான்...!!
மாலை பொழுதில் அலையோடு 
விளையாடிய அனுபவம் உண்டா??
மனதில் உள்ள பாரமெல்லாம் 
மறந்து போகும் அதிசயம்...!!
வடுக்களாய் இருக்கும் 
வலிகள் கூட கடுகாய் போகும்..!
கடல் அலைகள் எப்படியோ -
நம் மன அலைகளும் தான்..!

 
 
 

5 Response to " "

  1. AMEER Says:

    மனதில் உள்ள பாரமெல்லாம்
    மறந்து போகும் அதிசயம்...!!
    வடுக்களாய் இருக்கும்
    வலிகள் கூட கடுகாய் போகும்..!
    கடல் அலைகள் எப்படியோ -
    நம் மன அலைகளும் தான்..!
    miga miga arumai sagothara...
    vazlga valamudan...

  2. Unknown Says:

    This comment has been removed by the author.
  3. Unknown Says:

    சுனாமி வரும் என்ற பயம் இருந்தால்
    சொல்லிவிட்டு வாருங்கள் -I LIK THIS LINE NICE..........

  4. Anonymous Says:

    மாலை பொழுதில் அலையோடு
    விளையாடிய அனுபவம் உண்டா??
    superb ah irukum!!!!!!!!!!!!

  5. Unknown Says:

    மாலை பொழுதில் அலையோடு
    விளையாடிய அனுபவம் உண்டா??
    மனதில் உள்ள பாரமெல்லாம்
    மறந்து போகும் அதிசயம்...!!
    வடுக்களாய் இருக்கும்
    வலிகள் கூட கடுகாய் போகும்..!
    கடல் அலைகள் எப்படியோ -
    நம் மன அலைகளும் தான்..!

    enakku pidithamana varigal......arumaiyana kavithaigal