என்றும் என்னோடு...

உனக்கு தெரியாமல்
உன்னை தொடரும்
அருவமாய்
காற்றில் கைகளை வீசியபடி...
எத்தனை நளினமாய்
நீ நடக்கிறாய்...
மௌனமாய்
தென்றலோடு ......

ஆசையாய்
சொல்லவந்தேன்
அருகில் வந்த உடன
ஐம்புலனையும்
அடக்கிவிட்டாய்
ஆயாசமாய்
நிராசையாய்
என் மனது...

உன் விழிகளை
பார்த்து பேசும்
தைரியம்
கிடைத்தால்
இன்றே சொல்லுவேன்
உன்மீதுள்ள காதலை...நான்
சொல்லும் வரையாவது
விழியை மூடிகொள்ளேன்...
இப்போது நினைத்தாலும்
சிரிப்பாய் இருக்கிறது
உன் பாத சுவடுகளை
தொடர தொடர
எனக்குள்
வந்தது
அப்படி ஒரு தைரியம் .....

உன்னிடத்தில்
பிடித்தது
என்று
எதுவுமே
எனக்கு
தெரியாது
ஆனாலும்
உன்னை மட்டுமே
பிடித்தது .....

பேருந்து
நிறுத்தம் ....
நிழல் குடை ....
யார் கொடுத்த கொடையோ?
நீ இருப்பதால்....
பூங்காவை விட
ஜில்லென காற்று ....
உன் மீது பட்டதாலா?

அனைவரும்
போனபின்பும்
பேருந்து நிறுத்தத்தில்
அர்ஜுனனை
நினைவு கோரினேன்..
தவமாய்...
நீ வரவில்லையென...

பேருந்தில்
சில்லறையில்லாமல்
வந்தேன்....
நீ சிரித்தாய்...
கொட்டியது
வெள்ளி காசுகள்...

திரை கடல் ஓடி
திரவியம் தேட
பாரதி சொன்னான்..
என் திரவியம்
இங்கிருக்கும் போது...

அவள் கொண்டு சென்ற
காதல்...
இன்று வரை வரவில்லை
இனியாவது வருமா?
தெரியவில்லை..
பீடிகையோடு நான்...

எழுதும் எழுத்துக்களில்
தெரிவதெல்லாம்
அவள் முகம் தான்....
மற்றவையெல்லாம்
அற்றினையாக...
என்னையும் சேர்த்து...

உயிரோடு விளையாடும்
விளையாட்டு காதல்
உயிரற்ற உடலோடு
பிரேதமாய்
இடுகாடு தெரியாமல் ....

எனக்கென
எதுவுமில்லை
என்னையும்
நீ எடுத்துக்கொண்ட பிறகு...

2 Response to "என்றும் என்னோடு..."

  1. NILA ( நிலா ) Says:

    உன் விழிகளை பார்த்து பேசும்
    தைரியம் கிடைத்தால்
    இன்றே சொல்லுவேன்
    உன்மீதுள்ள காதலை...நான்
    சொல்லும் வரையாவது
    விழியை மூடிகொள்ளேன்.....காதலின் உணர்வுகள்.....அருமையான வரிகள்....வாழ்த்துக்கள்...

  2. kogila Says:

    உன் விழிகள் ஆயிரம் கவிதைகள்
    வரையும்
    ஆனாலும் இக்கவிதையை வரைய
    உன் விழிகளே காரணம்
    என்று என்னும் பொழுது
    என் மனம் சிறகடிக்கிறது
    வானில்.
    என் எண்ணங்களும்
    சிந்தனைகளும் உன்
    வசம் வாசம் செய்கின்றதை
    உன் விழி மூடி சொல்லிவிடாதே
    மல்லிகையை நினைத்து
    கள்ளிச்செடியிடம்
    சொல்லிவிடாதே உன்
    காதலை....