விடுமுறை கூட விலங்கு தான்...சனி ஞாயிறு
தினங்களில்
மட்டும்
தரிசனம்
இல்லையாம்
கல்லூரி
விடுமுறையாம்
இந்த முறையெல்லாம்
யார் கொண்டுவந்தது..?
ஒரு நாள் உன்னை
பார்க்கவில்லையெனில்
உயிர் வலி கொல்லுதடி...
உன் பெயரை உச்சரித்தால்
வலியின் சுவடு
பய்ய பய்ய
மறையுதடி...
கைபேசியில்
உன்னுருவம்
இருந்தாலும் கூட
அசையாமல்
இருக்கும்
பொம்மையாய்
உன்னை காண
பிடிக்கவில்லை
உயிராய் அருகாமையில்
உக்கார்ந்து நீ
பேசுகையில்
குறும்பாய்
என் முடி பிடித்து
விளையாடுகையில்
உணர்கிறேன்
உன் காதலை...
கற்பனையை
நினைத்து பார்த்தாலும்
நிஜமாய் இருக்கும்
நின்னுருவம்
நிழலில் தெரிந்தால்
நிஜமென்று கூற
மனம் கூட
மரத்து போகிறது...
மரகட்டையாய்...
வாரத்தின் முதல் நாள்
வாசலில் தவமிருப்பேன்
வஞ்சி உன்னை காணும்வரை...

0 Response to "விடுமுறை கூட விலங்கு தான்..."