அப்படியே............


விழிகள் செதுக்கிய
கண்ணீர் துளிகள்
முத்துக்களாய்...
மௌன பார்வையில்
நீ சொன்ன வார்த்தைகள் ....
என் தோள் சாய்ந்து
நீ பேசிய வார்த்தைகள்
விரும்பிய செவிகள்...
நட்புடன் விரல் பிடித்து
விளையாடிய கைகள்....
காற்றின் நேசத்தோடு
காலாற நடந்த கால்கள்....
மணற்பரப்பில் கட்டிய
கோபுர கலசங்கள்....
கடந்த காலத்தின்
எச்சங்கள் தான்...
எனினும் .....
மூளையோடு
பதிந்து போன
நிழல் படங்கள்...
கண் மூடும் பொழுதும்
கனவிலும் கண் சிமிட்டும்...
நீளா துயிலில்
மீளாமல் போனாலும்
மிச்சமாய் இருப்பதும்
அவைகள் மட்டுமே....
இளமை மாறாமல்....
அதே நளினத்தோடு....
அதே புன்னகையோடு...
உறைந்து போன
நினைவு பெட்டகமாய்....
திறந்து திறந்து
பார்க்கிறேன் ...இவை
யாவும் உயிர் பெறாதா??
எல்லாமே நிஜம்தானே...
நிழலாய் போனதே....
நின்னை நினைக்கின்ற
நொடி பொழுதும் கூட
கடையோர புன்னகை
மட்டும் அப்படியே.....
இரவு வணக்கங்கள்
அன்புடன்
கவிதை சொல்லுங்கள் & கேளுங்கள்
ஜெயராமன் பரத்வாஜ்.

0 Response to "அப்படியே............"