ஊஞ்சலாடும் நினைவுகள்

 ஊஞ்சலாடும் நினைவுகள்
 
 
 
 
உரசி பார்க்கும்
உன் நினைவுகள்
ஊடுருவி செல்லும்
உன் பார்வைகள்
பழகி போன
பாத சுவடுகள்...
கண்ணை கட்டி
விட்டாலும்
தடம் மாறாது
நீள் தண்டவாளமாய்
கைகளை காற்றில்
அலைய விட்டு
உன் கேச கற்றைகள்
என் கையில் சிக்கி
செல்லமாய் நீ
சிணுங்கும் நொடியில்
வலித்தாலும் அதை
வாய் சொல்லாது
இதழில் சிரிப்பை
தேக்கி வைத்திருப்பாய்
கண்ணா மூச்சி ஆட்டம்
என் முன்னே
வந்து வந்து
எனக்காக நீ
விட்டு கொடுப்பாயே
அப்போது தான்
புரிந்து கொண்டேன்
விட்டு கொடுத்தலும்...
விளையாட்டில் நீ
விட்டு கொடுத்தாய்...
வாழ்கையில் விட்டு
கொடுத்து விட்டு
உன்னுடனான
பொழுதுகளை
துணைக்கு
அழைக்கிறேன்...

0 Response to "ஊஞ்சலாடும் நினைவுகள்"