மண்ணாசை... கோல ஆசை...






அதிகாலை பொழுதில்
சூரியோதயத்திற்கு
அஸ்திவாரமாய்...
காலையில்
சந்திரன் வாசலில்
கோலம் போட...
அதை காணும்
ஆவலில்
இருட்டு போர்வையை
போர்த்தி கொண்டு...
பனி விழும் நேரத்தில்
பாது காவலாய்
நின்றேன்...
அவள் கோலம்
போடும் அழகை
வர்ணிக்க
வார்த்தைகள்
கிட்டவில்லை...
கம்பரையும்
வள்ளுவரையும்
கண்ணதாசனையும்
வாலியையும்
வைரமுத்துவையும்
நினைவில் வைத்தேன்...
அவர்கள் பெயர்கள்
நினைவுக்கு
வந்த வண்ணமாய் இருந்ததே
தவிர எனக்கு....
வார்த்தை சிக்கவில்லை...
கேசத்தை அவள்
ஒதுக்கிய போது..
நெற்றியில் முதுமாலையா?
வியப்புடன் நோக்கினேன்...
வியர்வை முத்துக்கள்
கோர்த்திருக்க கண்டேன்....
பூக்களை சூழ்ந்திருக்கும்
பனித்துளியாய்....
அவள் முகம்......
ஒய்யாரமாய்
நின்று அவள்
போட்ட கோலத்தை
ரசித்தாள்....
சுற்றும் முற்றும்
பார்த்து...
திருஷ்டி சுற்றி
சிரித்து கொண்டாள்..
அந்த கோலத்திற்கு
அடித்தது யோகம்...
அவள் நின்ற
மண்ணாய்...
கல்லாய்...
அவள் போட்ட...
கோல மாவாய் இருக்க
மனம் ஆசையானது....

0 Response to "மண்ணாசை... கோல ஆசை..."