எனக்கு மட்டுமே.....
ஆழியில் சிக்கிய
துரும்பாய் .....
அல்லல் படும்
மனது......
அல்லும் பகலும்
அளாவிய ....
ஆசை வார்த்தைகள்...
நிதம் நிதம்
நித்திரை மறந்து ....
முத்திரை பதித்த
முரட்டு இரவுகள்...
பின்னிரவு நேரம்
சுவர்கோழி
கூவலையும்
புறத்தே தள்ளிவிட்டு...
பூபாளம் இசைத்த
இரவுகள் ஏராளம் ....
அத்தனையும்
மொத்தமாய் ....
ஊழி காற்றில்
உரு தெரியாது போனதே...
உண்மை அறியாது..
நிந்தனை செய்யும்
நின்னை .....
சரிந்த சீட்டு கோட்டைகளாய்
காற்றில் கட்டிய மாளிகையாய்
கண் முன்னே நொறுங்கி போனதே....
நெஞ்சம் கல்லாய் போனதா...?
நினைவும் மறந்தே போனதா..?
நிஜங்களும் நிழலானதா..?
நிலை கண்ணாடியில்
நித்தம் பார்கிறாயா?
நின்னையே கேட்டு பார்?
நீ செய்வது சரியோ?
நீயாய் வந்தாய்....
நீயாய் சென்றாய்....
உன்னை உளமார
நேசித்ததை தவிர....
வேறென்ன பிழை செய்தேன்...
வேதைனையில் .....
மனமிடும் ஓலம்
எனக்கு மட்டுமே.....

0 Response to "எனக்கு மட்டுமே....."