அறிவாய் மனிதம்....


தோன்றலில்
பேதைமை இல்லை...
நம்மை சுற்றி
உலாவும்
இயற்கையில்
பேதம் இல்லை...
எப்போது பிறப்போம்
எப்போது இறப்போம்
என்பதை அறியோம்...
இருக்கும் சில
மணித்துளிகளில்
சாதித்ததாய்
மார் தட்டி
மதம் எனும்
மதம் பிடித்து ....
மனிதம்
மறக்கிறோம் ...
பெற்றவை எல்லாம்
இங்கிருந்தே...
கற்றவை எல்லாம்
இங்கிருந்தே...
காற்றில் ஊஞ்சல்
ஆடும் கூடு
ஆறடி ....
காற்றடைத்த
பையில்
சதைகளோடு
எலும்புகளும்
ஆடும் ஆட்டம்
என்னே என்னே..
பலமுறை
யாசித்தலும்
சில முறை
யோசித்தலும்
ஆறறிவை
கொண்டு...
அவன் செய்யும்
விதைகளும்
வித்தைகளும்
விந்தைகளும்
ஏராளம்...
ஏளனம்
எக்காளம்
எகத்தாளம்
எத்தனை எத்தனை
எள்ளி நகையாடி
உதாசீனபடுத்தி..
உன்மத்தம் ஆகும்
மனிதா....
இடும் காடும்
சுடும் காடும்
தொலை தூரம் இல்லை...
தொட்டுவிடும் தூரம் தான்...
நீ போகும் போதும்
அடக்கமாவதும் ...
அனலில் அடங்கி போவதும்
ஆறடி மட்டும் தான்...
அப்பழுக்கில்லா
உன் உயிர் மட்டும்
ஜனனம் தேடி.... 

0 Response to "அறிவாய் மனிதம்...."