தனியாய் ....ஜனிக்கும்போதே
நஞ்சுகொடியோடு...
ஆனாலும்
ஆண்டவன் சொரூபம்
எவர் எடுத்து கொஞ்சினாலும்
இதழ்களில் சிரிப்பை தவிர
வேறெதுவும் தெரியாது....
பழக பழக பாலும் புளிக்குமாம்...
அப்படிதான் ஆனது...
மெல்ல மெல்ல ஏறும்
விசமாய் நெஞ்சில்
வினையும் சேர்ந்து...
வல்வினைகள்
தெரிந்து சில
தெரியாமல் பல..
ஆட்டம் ஆரம்பமானது...
கால் சராய் போடும்
காலம் போய்...
பதின்பருவம்
மெல்ல மெல்ல
ஆண்மை வந்ததாய்...
ஆணவம் வந்தது...
ஆசையும் சேர்ந்தது...
கூடாநட்பு....
துணையோடு
வஞ்சும் நஞ்சும்
விளையாட்டாய்
வினையென்று தெரியாது...
சாட்டை சுழற்றிய
பம்பரமாய்...
பரபரவென
மனது...
கள்ளம்...
கபடு....
இன்னும் இன்னுமென
பாபங்களை
பங்கு போட்டு...
திரும்பி பார்கையில்
தன்னந்தனியாய்
துணைக்கு வந்த
துணை எல்லாம்
வழித்துணையாய்...
அவரவர் இடங்கள்
அடைந்ததும்
அறுந்து போயின...
உப்பு தின்னவன்
தண்ணி குடிக்கனுமாம் ...
இப்போது குடிக்கிறேன்...
தனியாய்....
துணையில்லாமல்...

0 Response to "தனியாய் ...."