மனதின் ஓட்டம் ....

 மனதின் ஓட்டம் ....
 
 
 
சிரிப்பை கொடுத்து...
சிந்திக்கும் அறிவை கொடுத்து
சிறகடிக்கும் எண்ணங்கள் கொடுத்து...
சுதந்திரத்தை சுவாசிக்கவும் ....
சிரமத்தை அணுகவும்
கற்று தந்த நீ...
வலிகளையும்
வடுக்களையும்
மறைக்க கற்று
தராமல் போனாயே..
எந்தையே...
ஏங்க வைத்து
என்னை
மொத்தமாய்
அலைகழிப்பதில்
உனக்கென்ன
ஆனந்தம்....?
துளியாய்
விஷமும் தா..
மயான பாதைக்கு
பூ தூவ
மலரும் கொண்டுவா....
கவிதைகள் அனைத்தும்
எனதே..
ஆண்பாலாய் இருந்தாலும்
அன்பால்
எழுத பட்டவை...
வலிகளை
வார்த்தையில்
கோர்க்கிறேன்...
வடுக்களோடு
போகட்டும்
என் வலி...
பெயர் போட
இஷ்டம் இல்லை...
இதுவும் அவள்(கலை மகள்)
போட்ட பிச்சை தானே...
உயிர் ஜனித்த
பொழுதை விட
உயிர் கொடுத்த
பொழுதை
உயிராய் நினைத்தேன்...
ஜனித்த போது
எனக்கு மட்டுமே
பிடித்தது...
உயிர் கொடுத்த போது
உலகமே வியந்தது..
கவிதை குழந்தை...
உன்னிடம் எதையும்
மறைத்து எனக்கு
பழக்கமில்லை...
இன்றும் அப்படிதான்...
திறந்த புத்தகமாய்
நீ மட்டும்
ரகசியமாய்
வந்தாய்...
ரகசியம்
சொல்லி தந்தாய்...
ரகசியமாய்
போனாயே...
இப்போது ரகசியம்
காக்க தெரியாமல்...
தினம் தினம்
போராட்டத்தில்
கனவுகளை
கொன்று
வருகிறேன்...
ரகசியமாய்
எப்போது வருவாய்??
 
 
 

0 Response to "மனதின் ஓட்டம் ...."