1 ரசித்தவர்கள்


சூறாவளி 
வானத்தை தொடும் அளவுக்கு 
ஆழியை போல் காற்றை கண்டதுண்டா?? 
சூறாவளி என்று அதை சுருங்க சொல்லுவர்!!!
சுற்றி சுற்றி வந்து சுருட்டி செல்லும்...!!!
யானை வாயில் போன கரும்பு போல்...!!
இதற்கு விதி விலக்கு கிடையாது.....!
தேசத்திற்கு தேசம் வித்யாசபடும் !!
பேரும் கூட தான்!!!காட்சி விரிவது 
திரையில் மட்டும் அல்ல நிஜத்திலும் தான்!!
அதுவும் பாலை வனமாய் இருந்துவிட்டால்...
சொல்லவே வார்த்தை போதாது...!!!
தூரத்தில் ஆரம்பித்து...அருகில் அருகில்..
மிக அருகில் வரும்போது...
மணல் காடாய் .....
பெரிய மாளிகையும் இதற்கு முன்னால் 
பூஜ்யம்தான்...!!!
மழையை விரட்டி விரட்டி இது 
விளையாடும் சடுகுடு...
காற்றும் மழையும் 
இயற்கையின் பிள்ளைகள்...
இறைவனின் ஈடு இல்லா 
படைப்புகள்...!!!
அவைகளுக்குள்ளும் 
பாகு பாடு உண்டு...
மென்மையை தாங்கி வரும்
தென்றல் கூட காற்று தான்...!!!
காற்றுக்கு தடை கிடையாது..!!
எங்கும் எப்போதும்.....
நம் மூச்சாக!!!


 




மழை

2 ரசித்தவர்கள்


மழை 

நினைவு தெரிந்த நாளிலிருந்து மழைக்கும் எனக்குமான உறவு...!!
நெடிய தொரு பயணம் போல...!!!
மழை துளி சட்டையில் கோலம் போட்டு...என்
மேனியை நனைக்கும் போது எனக்குள் சொல்ல முடியா உவகை ...!!
அதுவும் மிதிவண்டியில் பயணிக்கையில் ......
அளவிலா சந்தோசம் தான்...!!!
அடை மழையாய் இருந்தாலும் சரி..!
ஆலங்கட்டி மழையாய் இருந்தாலும் சரி!!!
எனக்கு சம்மதமே...!!!
என் அனுமதி இல்லாது என்னை தீண்டும் உரிமை
மழைக்கு மட்டுமே ....!!!
என் காதலி என்னை தொடுவதற்கு நாணுவாள்....!!! ஆனால்
மழை காதலி என்னை ஆலிங்கனம் செய்து
என்னை முழுமையாய் தழுவி விளையாடுவாள்....!!!!
ஆதலினால் காதலியுங்கள் .....மழையை....!!!!
தொப்பல் தொப்பலாக நனைந்து வீட்டுற்குள் செல்லுகையில் ...!!
இன்னும் கொஞ்சம் நனையலாமே  என்று என் மனம்
என்னிடம் கெஞ்சும் அவலம் ....நினைக்கையில் ....
எனக்கே சிரிப்பாகத்தான் தோன்றும்....!!!!
மழை விட்டாலும் விடாத  தூவானமாக...!!
ஏதாவது ஒரு மரத்தின் கீழ் நின்று பாருங்களேன்...!!
யாரையாவது கொஞ்சம் மரத்தை அசைக்க சொல்லுங்களேன்..!!
காற்று சில சமயம் அவ்வேலையை செவ்வனே செய்யும்!!!!
உங்கள் மனதில் உற்சாகம் உங்களாலே வர்ணிக்க முடியாதே!!!
வாழ்வின் சிறு சிறு சந்தோசங்கள் இது போல தான்...!!!
நம் அடி மனதில் இருக்கும்....
ஏர் கொண்டு கிளறுங்கள் .....

நீங்கள் அறியாது
நீங்களே மழையோடு போட்டி போட்டு
உங்களை நனைத்து கொள்விர்கள்...!!!
இதுவரை அப்படி இல்லை என்றால்....
ஒரு முறை அதை முயற்சி பண்ணுங்கள்...!!
அதை நான் அனுபவித்தது போல்...
நீங்களும் மழை கவிதை அழகாய் கோலம் போடுவீர்கள்..!!!





இசை

2 ரசித்தவர்கள்


இசை 

"அம்மா" என்ற வார்த்தைக்கு
அகிலமே நடனம் ஆடும்...!!
அதை போல் தான் இசைக்கும்....!!!
இசைக்கு மயங்காதார் யார் இங்கு?
இனம் மொழி மதம் அனைத்தையும்
இல்லாது செய்யும் ஒரே சாதனம் இசை மட்டுமே!!!
இசைக்கு பாகுபாடு கிடையாது...!!
உலகளாவிய உண்மையும் இதுதான்!!!
ஐந்து அறிவு கொண்ட மிருகத்தை கூட
ஆட்படுதிவிடும் ஆற்றல் இசைக்கு மட்டுமே!!

குழல் இசை கேட்டு பசுக்கள் சிலையாய் நின்ற
காதை காவியத்திலும் உண்டு....
தாலாட்டு இசை கேட்டு தூளியில்
தூங்கும் மழலை இன்றும்
தரணியில் உண்டு....!!
இசையில் ஸ்ருதிபெதமாய் இருந்தாலும்!!
அதுவும் இசைதான்...!!!
இசையின் மொழி அறிந்தோர்
இறைவனை கூட அருகில் அழைக்கலாம்!!!
ஈசன் கூட இதற்கு உதாரணம்...!!!
ஸ்வரங்கள் ஏழு என கேள்வி...
அருவியாய் கொட்டும்
அள்ள அள்ள குறையாத
அட்சய பாத்திரம் ......
பாமரன் முதல்  படித்தவர் வரை
அனைவர்க்கும் பரிச்சயம் இசை ...!!!
கலை வாணியின் வரம்
கலைஞன் சொத்து...இசை மட்டுமே!!!
செல்வத்தை போல் இடம் பெயராது...!!!
இவ்வளவு ஏன்?
இசைக்கு உருகாதார்
இவ்வுலகில் இலர்!!!




1 ரசித்தவர்கள்



என் வாழ்வின் சில பக்கங்கள் 


என் கடந்த கால நாட்குறிப்பை பொரட்டி பார்த்தேன்...
வருடங்கள் ஞாபகம் இல்லை...!!
ஆனாலும் அது சந்தோஷ தருணங்கள் போலும்....!!!
எப்போதும் நம் கடந்த காலத்தின் நிகழ்வுகள்,,,
நிகழ காலத்தின் தொடர் கதையாய்....!!!
நம்மை ஏதோ ஒரு ரூபத்தில் தொடர்ந்து
நம்முள் ஒரு நினைவு விதையை விதைத்து விட்டு
விலகி செல்கிறது...!!
எங்கோ கேட்கும் பாடல் கூட
நமக்குள் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும்..!!

தொடர்பு விட்டு போன நண்பனின் தொலைபேசி எண்கள்...!!
தொலைந்து போனதாய் நான் கருதும் என்னுடைய
வங்கியின் ரகசிய குறியீடு எண்கள்...!!
வர வேண்டிய வரவுகள்...!
கொடுக்கவேண்டிய தொகைகள்...!!
இப்படி சொல்லிகொண்டே போகலாம்!!!
சந்தோசம் என்னும் வார்த்தைக்கு அப்படி
என்னை ஒரு மாயம் இருக்கிறது...!!
அவ்வார்த்தையை உச்சரிக்கும்போதே
அளவிலா ஆனந்தம் அடைகிறேன்!!!
வாழ்வின் நிதர்சனமான என்று ...!!
எதுவும் கிடையாது...!!!
எல்லாமே மாயை தான்!!!
இப்படியெல்லாம்  நாடகம் அரேங்கேறிருக்கிறது...!
கொடுத்தவை எல்லாம்    இங்கிருந்து எடுத்தவைதான்....!!!
எடுத்தவை எல்லாம்   இங்கிருந்து கொடுத்தவை தான்!!!
உலகம் ஒரு நாடமேடை தானே???
நன்றாய் நடிப்பவரின் நாடி ஒரு நாள்

அவரிடம் சொல்லாமல் தான் போகபோகிறது..!!
அன்னபட்சியாய் இருக்க பார்க்கிறேன்..!!
பாகுபடுத்தி பார்த்து அதிலிருந்து...!!
பாசத்தை மட்டுமே நேசிக்கிறேன்...
நலம் விரும்பிகள் இருக்கலாம்...!!
நட்டாற்றில் விட்டு சென்ற நண்பனும் இருக்கலாம்!!
உதட்டில் புன்னகை சிந்தி உள்ளத்தில் விஷம் கொண்ட
உறவாகவும் இருக்கலாம்!!!
இதுவும் கடந்து போகும் என்று
உளமார நினைத்துவிட்டால்...
உள்ளத்தில் உயர்ந்துவிடுவாய்!!!
உன்னை அறிந்து கொள்....
உனக்குள் இருக்கும் ரகசியம்...!!!
உன்னுடனே உறங்கட்டும்...!!
உரக்க சொல்லிவிடாதே....
உலகம் உன்னை பரிகாசிக்கும்....!!!
பூட்டி வைத்துகொள் யார் தட்டினாலும்
திறந்துவிடாதே...!!!
ரகசியங்கள் ...ரகசியமாய்
இருக்கும்வரை தான் நன்று...!!
அதை செய்தி ஆக்கிவிடாதே...!!


பில்ல குட்டிக் காரன்

2 ரசித்தவர்கள்

பில்ல குட்டிக் காரன் 



   சிறு குறிப்பு  : (மேலே உள்ள படத்திற்கும் கதைக்கும் சம்பந்தம் இல்லை)

கோபால் அன்று மிக உற்சாகமாய் இருந்தான். பல மாதங்களாக முயற்சி செய்து தற்சமயம் தான் அவனுக்கு விடுப்பு கிட்டியது.  சொந்த ஊருக்கு செல்வதானால் யாருக்கு தான் 'மகிழ்ச்சி' இல்லாமல் இருக்கும். புகை வண்டி நிலையத்தில் நண்பர்களிடம் பிரியா விடைபெற்று , இதோ இறுதியாக ஊருக்கு கிளம்பி விட்டான்.  புகை வண்டி தான் முன்னோக்கி சென்றது. இருட்டை கிழித்து கொண்டு அது செல்லும் அதே வேகத்தில் இவன் மனம் பரபரவென பின்னோக்கி சென்றது.

"பாவூர்" பேரை சொன்ன உடனே இதழில் புன்னகை அரும்பியது . பெயருக்கு ஏற்றாற்போல்  'கோ' வாலு தான்.  வீட்டில் கடைக்குட்டியாய் பிறந்ததால் இவனுக்கு செல்லம் ஜாஸ்தி. அதை விட இவன் செய்யும் குறும்பால் பிரம்பு அடியும் ஜாஸ்தி.
ஊரில் மரியாதையான குடும்பத்து பிள்ளை. ஆனால் செய்யும் வால் தனத்திற்கு பஞ்சமே இல்லை. எத்தனையோ முறை அன்பாக சொல்லியும் , அதட்டி சொல்லியும் , முடிவில் அடித்து சொல்லியும் பார்த்தாயிற்று. இவன் திருந்துவதாக தெரியவில்லை. பால பருவம் என்பதால் யாரும் இவனை பொருட்படுத்தவில்லை. ஆனால் கோபால் வீட்டிலும் சரி , பள்ளியிலும் சரி சேட்டை செய்வதில் சமர்த்தன்.

பள்ளியில் வகுப்பு ஆசிரியர் கொஞ்சம் அசதியில் கண்ணயர்ந்தால் அவரை தலைமை ஆசிரியரிடம் போட்டு தந்து திட்டு வாங்கி தருவான்.  வீட்டில் இருந்து பள்ளிக்கு வருவதற்குள் எப்படியும் ஒரு நாலு பேர் அவனை வாழ்த்தி அனுப்பாவிட்டால் அன்று மழை தான் வரும்.
இப்படிதான் ஒருமுறை களத்துமேட்டில் அறுப்பு வேலை நடந்து கொண்டிருந்தது. ஒருபக்கம் 'போர்' அடித்து கொண்டும் மறுபக்கம் கட்டு கட்டாக வைக்கோல் கட்டிக்கொண்டும் வேலை நடந்து கொண்டிருந்தது.
கிராமத்தில் உள்ள சில அழகான காட்சிகளில் இதுவும் அடக்கம்.மாடுகள் சுற்றி சுற்றி வந்து கதிரில் இருக்கும் நெல்லை தனித்து பிரிப்பதும் அதை கட்டு கட்டாக பிடித்து கல்லில் அடிப்பததும் பார்பதற்கே ரசனையாக இருக்கும். இதில் வேலை களைப்பு தெரியாமல் இருக்க நாட்டு பாடல் கணீரென ஒலிக்கும்.

அனைவரையும் முடிக்கி விட்டு கொண்டு கையில் சுருட்டுடன் சக்கரை தேவர் நின்று கொண்டிருந்தார். கடவுள் பாதி, மிருகம் பாதி, கலந்து செய்த கலவை என்று சொன்னதுபோல் அவரும் அப்படிதான். அவருடைய கரிய உருவமும் முரட்டு தோற்றமும் முறுக்கிய மீசையும்,  பளீரென தூய உடையில் கையில் சுருட்டுடன் அவர் வருவதை பார்த்தாலே நின்று மரியாதை செலுத்தும் ஊர் மக்கள் ஒரு பக்கம். அவரிடம் பேசுவதற்கே பயந்து செல்லும் .

அறுப்பு நடந்த வயலில் பள்ளி சிறார்கள் ஊதுகோல் செய்யும் பழக்கம் உண்டு. அந்த கோஷ்டியில் நம்ம 'கோ' வாலும் இருந்தான்.  சிறார்களை விரட்டி விட்டாலும் யாரும் கவனிக்காது இருக்கும்போது ஊடே நுழைந்து ஊதுகோல் செய்யும் லாவகம் தனி திறமை தான்.  பீபீ எடுக்க போன நம்ம 'கோ'வாலு கண்ணில் அருகில் இருந்த  மாமரமும் அதில் காய்த்து தொங்கிய மாங்காயகளும்  பட்டு விட்டது. சும்மா இருந்த சங்கை ஊதி கெடுத்தான் ஆண்டி என்பது போல் மா மரத்தில் கல்லை வீசி அடித்தான். அவன் போதாத காலம் கல் அனைவரையும் விரட்டி வேலை வாங்கி கொண்டிருந்த சக்கரை தேவர் தலையில் விழுந்தது.  'ஐயோ ' என்று குரல் கொடுத்த தேவர், கோபாவேசமாக திரும்பினார்.
கண்கள் அக்னியை துப்பின. முறுக்கிய மீசை இன்னும் சிலிர்த்து நின்றது.
அனைவரையும் விரட்டி கொண்டு வந்தார்.
குரங்கு குட்டியை தன் நெஞ்சில் சுமப்பது போல் கோபால் தன் புத்தக மூட்டையை முதுகில் சுமந்து ஓடினான். மற்றவர்களுக்கு இணையாக ஓட முடியாமல் ஒரு கட்டத்தில் தோட்ட காரனிடம் பிடிபட்டு விட்டான். அவன் கோபாலை சக்கரை தேவரிடம் இழுத்து சென்றான். அதற்குள் சக்கரைதேவர் அங்கிருந்த வேப்ப மரத்து கொப்பை ஒடித்து கொண்டு அடிப்பதற்காக வந்தார். அவரை பார்த்த பயத்தில் கோபால் , அவரிடம்  ஐயா விட்ருங்க.. நான் புல்ல குட்டி காரன் என்று கூறினான். அதை கேட்ட மாத்திரத்தில்
கையை ஓங்கி கொண்டு அடிக்க வந்தவர் இடி இடியென சிரித்தார். கோபாலுக்கு ஒன்றும் புரியவில்லை. ஆனால் அடி விழவில்லை , அதுவரை மனதுக்கு சந்தோசமாகவும் ஆறுதலாகவும் இருந்தது. அப்படியே வந்தவர் நின்று எத்தன பிள்ளைடா பெத்த? என்று கேட்டார். தான் சொன்ன வார்த்தையின் விளக்கம் அறியாது மழுங்க மழுங்க முழித்தான் கோபால். இனிமேல் இந்த மாதிரி செய்யாதே என்று கண்டித்து அனுப்பி விட்டார்.

இன்றும் கோபாலுக்கு அவனுடைய பெற்றோர் வைத்த பெயரை விட இந்த பெயர் தான் அன்றில் இருந்து நிலைத்து. அனைவரும் அவனை பில்ல குட்டி காரன் என்று தான் அழைப்பார்கள். இன்று வரையிலும் அது தொடர்கிறது. கோபால் அதை பெரிதாக எடுத்து கொள்வதில்லை. காரணம் இன்று அவன் புள்ள குட்டி காரன் தான்.

ஊர் வந்து சேர்ந்தவுடன், அவனுடைய பால்ய பருவம் திரும்பியது போல் உணர்ந்தான்.
ஆனால் அவனுடைய மாற்றத்தை  போலவே நிறையவே  மாறி இருந்தது 
"பாவுரின்" இன்றைய நிலை ! எங்கு பார்த்தாலும் பசுமையாய் தெரியும் வயல் வெளிகள் காணாது ஒரே வண்ண மயமான கட்டிடங்கள் உருவாகி இருந்தன. ஒரே நொடியில் மனம் வெறுமையில் நொறுங்கியது. ஏதோ ஒரு புதிய இடத்திற்கு வந்தது போல் உணர்ந்தான்.
'வாடா புல்ல குட்டி காரா' என்ற குரல் கேட்டதும் , குரல் வந்த திசையை நோக்கினான்.
சக்கரை தேவர் வெளுத்து போன மீசையுடன் அவனை பார்த்து சிரித்தவாறே வந்தார்.

எது மாறினாலும் மண்ணின் மனமும், மக்களின் மனமும் மாறாது இருந்தது அவனுக்கு பழைய உற்சாகத்தை திருப்பி தந்தது. தாய்  மாட்டை  பார்த்த கன்று போல் மனம் கூதூலமானது

பாவூர்  ராஜா   

சிசு

4 ரசித்தவர்கள்


சிசு 
கருவறையில் சிறை பட்ட
காலம் தொட்டு...
கண்ணிமைகள் திறக்க முடியாது...!!
மாதங்கள் பல கஷ்ட பட்டு
கருவறை திறக்கும் முன்...
முட்டி மோதி..
உலகம் பார்க்க
பிறக்கும்போதே போராட்டம்...!!! உன்
பக்கத்தில் கிடத்தியவுடன்  -
முதலாய் என்னை தொட்டு பார்த்தாய்!!
முழுதாய் பிறந்திருக்கிறேனா என்று??!
உன் ஸ்பரிசம் பட்டவுடன்
என்னுடல் சிலிர்த்தது- உனக்கும் எனக்குமான
உறவு அங்கே ஜனித்தது -
என் கை கால்கள் அசைத்தவுடன் தான்
உன் மனதில் ஒரு நிம்மதி இருந்திருக்கும்!!!
என்னை பற்றிய கனவு உனக்கு அங்கே பிறந்திருக்கும் ..!!
என் அழுகை கேட்ட பிறகு -  உனக்கு
என் குரல் வளம் தெரிந்தது...!!!
உன் கண்ணில் ஆனந்த கண்ணீர் -
உஷ்ணமாய் என் மீது விழுந்தது -
நீ ஆசைபட்டாய் ...அடைந்து விட்டாய்..!!
என்னை முழுமதியாய் பெற்றதற்கு -
என் முதற்கண் வணக்கம் உனக்கு...!!!
பிறவி எடுப்பது பெரிதல்ல....!!எடுத்த
பிறவிக்கு ஊறு இல்லாது
என்னை பெற்ற பலனை நீ
பெருமை பேச வேண்டும்!!
அதற்கு தானம்மா நான் இவ்வளவு படுகிறேன்...!!
ஆண்டுகள் ஆனாலும்
அனுபவிக்காது நீ போக மாட்டாய்!!!
அதுவரை கொஞ்சம் பொறு தாயே!!!
நீயின்றி  என் வாழ்வு ஏது ???





பனித்துளி...

1 ரசித்தவர்கள்
 

பனித்துளி...


இரவில் ஜனித்து
நிலவுடன் உறவாகி...!!!
பகலவன் காலனாய்....
எங்கள் உயிரை துச்சமென எடுத்து..!!
எத்தனை முறை சென்றாலும்....!!
வெட்ட வெட்ட வளரும் நகம் போல்...!!
ஜனித்து கொண்டே இருப்போம்...!!
பூவின் வாசனை நாங்கள் அறியாததா??
அல்லியும்  மல்லியும் எங்கள் ஆருயிர் தோழிகள்!!
பூக்களுக்கு ஆடை போட்டு அலங்காரம் செய்கிறோமே...!!
அது பொறுக்கவில்லை இந்த சூரியனுக்கு...!!!
மேகங்கள் சூழ்ந்தாலும்
வாயு தேவன் விரட்டி விடுகிறான்...!!
எங்கள் ஆயுளை நீட்டிக்க
ஆதரவு தருவதற்கு ...
யாரும் இலர்...
எத்தனை முறை எரிந்தாலும்...
இறக்கை முளைத்த பீனிக்ஸ் போல்..!!!
நாங்களும் மடிந்து போனாலும்...
மீண்டும் மீண்டும் ஜனிப்போம்...
சூரியனை தொடும் தூரம்
வெகு தூரம் இல்லை...
அந்த பீனிக்ஸ் பறவைக்கு...!!! அதே  போல்  -
கர்ணனுக்கு கவச குண்டலம் போல்...!!
எங்களுக்கும் ஏதாவது கவசம் வையுங்கள்!!!
மனிதருக்கு மட்டும் தான் பாதுகாப்பா?
மரித்து போகும் எங்களுக்கு இல்லையா??
கொஞ்சம் யோசியுங்கள்...



புத்தாண்டே வருக

2 ரசித்தவர்கள்

புத்தாண்டே  வருக

மீண்டும் ஒரு புதிய அத்தியாயம் துவக்கம்!!!
புதிய முயற்சிகள் ...புதிய பரிமாணங்கள்!!
புதிய துவக்கங்கள்!!!
இயற்கை மட்டும் அப்படியே!!!
காலம் தன் வேலையை  செவ்வன செய்கிறது!!!
வருடங்கள் நேரத்தை விட வேகமாக தான் ஓடுகிறது!!!
ஊர்வன தன் சட்டையை கழற்றி போடுவது போல்
நாமும் நமக்குள் இருக்கும்
நலிந்த குப்பைகளை
நாசுக்காக வெளி தள்ள இன்னுமொரு சந்தர்ப்பம்!!!
நல்ல திருப்பம் வருமென மெனகெட !!!
காலம் திரும்பி அரிசுவட்டில் ஆரம்பம்!!!
இனி வரும் காலம் எல்லாம்
இனிதே நடக்க
இறைவனடி தொழுவோம்!!
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!!!

உதிர்ந்த இலை

2 ரசித்தவர்கள்


உதிர்ந்த இலை

இலையுதிர்காலம்  தொடங்கும் சமயம்
மரத்தின் அருகில் சென்று இருக்கீர்களா??
உதிர்ந்து போன இலைகள் தங்கள்
உயிரை மரத்திற்கு உரமாய் தந்து விட்டு தான் போகிறது!!!

காய்ந்து போயிருந்தாலும் எருவாய் உருமாறும் அதிசயம்!!!
மக்கி போய் மண்ணோடு மண்ணாக ....
அடையாளம் தெரியாது போனாலும்...!!!
அழியும்போதும் அதன் அடையாளைத்தை - மரத்தின்
அடியில் தான் விட்டு போகிறது...!!!
மரம் பட்டு துளிர்வது இப்படிதான் போலும்!!!
உயிர் விடும் ஓலம் கேட்டு இருக்கீர்களா??
காற்று அடிக்கும்போது கேட்டு பாருங்கள்...!!
அதன் நுண்ணிய ஓசை உங்களுக்கு கேட்கும்!!!
மரத்தின் மீது அதற்கு இருக்கும் பற்று ....!!!
பாசத்தை கூட இவ்வளவு எளிதாக நமக்கு
புரிய வைத்துவிட்டுத்தான் போகிறது...!!!
உதிரும் இலையை  இனிமேல் குப்பையாய்
ஒதுக்காதீர்கள்...!!!
மரங்கள் அழும் ஓசை உங்களுக்கு
புரியலையா??


மன்னர் ஆட்சி

1 ரசித்தவர்கள்


மன்னர் ஆட்சி 

இதுவரை சரித்திரத்தை நாம் திரும்பி பார்த்தோம்!! மாறாக...
சரித்திரம் திரும்புகிறது.....
தனி நாடு கோரிக்கை எங்கும் ஒலிக்க தொடங்கி விட்டது...!!
பாரதி பாடிய பாடலுக்கு மரியாதை குறைகிறது....!!!
"முப்பது கோடி முகமுடையாள் உயிர் மொய்புறம்  ஒன்றுடையாள்
இவள் செப்பு மொழி பதினெட்டுடையாள் -
சிந்தனை ஒன்றுடையாள்!!!!"
அந்த வரிகளுக்கு உள்ள அர்த்தம் புரியாது
அரசியல் அவலம் இங்கு அரங்கேறுகிறது!!!
தனி நாடு கோரிக்கை எவ்வளவு பெரிய முட்டாள் தனம்!!!
பஞ்ச தந்திர கதைகளில் சொல்லாத கருத்துக்களா??
ஆண்டாண்டு காலமாய் அடிமை பட்டு இருந்தோம் !!
அப்போது கூட நிம்மதியாய் தான் இருந்தோம்...
சுதந்திரம் என்ற வார்த்தை ஒலிக்க தொடங்கி...
இன்றுவரை சுவாசிக்கும் காற்று கூட வரி ஆகிறது  !!!
 இந்தியாவை கூறு போட கோடாலிகள் தயார்!!!
பாரத மாதாவை காப்பாற்ற யாரிங்கு உளர்?
சட்டம் ஒழுங்கு வார்த்தையாக மட்டுமே இருக்கிறது??
தடி எடுத்தவன் தண்டல் காரன் என்பது போல்..
இனி அடுத்தவன் வருகை மிக எளிதாகி விடும்!!!
இந்தியன் என்று சொன்னால் மட்டும் போதாது!!!
இளைஞனே எழுந்து வா...
தினவெடுத்த தோள்கள் எங்கே??
தீமையை தீமையால் தான் வேரறுக்க முடியும்!!!
ஒன்று பட்ட பாரதம் என்று பேரிகை முழக்கு!!!
இளைய சமுதாயமே
நாளைய இந்திய கணுவு இருக்கட்டும்..!!!
இன்றைய நிலையை நீ உணரந்துகொள்!!!
வாழ்க பாரத மணி திரு நாடு!!!


இந்தியா ஒளி(ர்)கிறது

1 ரசித்தவர்கள்

இந்தியா ஒளி(ர்)கிறது
சமவெளி பகுதியில் போனதுண்டா...
ஒத்தயடி பாதை கேள்விப்பட்டதுண்டா?
கிராமங்களில் இன்னும் பஸ் வசதி இல்லா
இல்லங்களும் இருக்கிறது...?
மின்சாரத்தை காணாத சுப்பனும் இருக்கிறான்!!
கணினி காலம் வந்தாலும் எங்களுக்கு
கால் வயிறு கஞ்சி தான்!!!
இந்தியா!! கிராமங்களில் தான் வாழ்வதாக
வாழ்ந்து போன தேச தந்தை காந்தி மகான்
வாழ்த்தி விட்டு போனார்!!!

கிராமங்களில் நாங்கள் உழைப்பதால்
நகரங்கள் நன்றாகவே ஒளிர்கிறது...!!!!
தமிழ் நாட்டின் நெற்களஞ்சியம் தஞ்சை
தண்ணீருக்கு போராடி போராடி
கண்ணீரை தான் பாய்ச்சலுக்கு அனுப்புகிறது!!!
விளைச்சல் மட்டும் வரவில்லை என குறை !!!
விலை வாசி  தினம் பட்டியலில் .....!!!
பொருட்கள் படிப்பதற்கே அன்றி
வாங்குவதற்கு அல்ல!!!
இந்தியா ஒளிர்கிறது என்று சொன்னால்
எப்படி??

பிரார்த்தனை..

0 ரசித்தவர்கள்

பிரார்த்தனை..

பிறருக்கு செய்வதால் தான் அது பிரார்த்தனை ..!!
எப்போதும் எனக்கு என்ற ஒற்றை சொல்லை விட..
நமக்கு என்று சொல்லி பாருங்கள் நாவும் அசையும்..!
பிறருக்காக செய்யப்படும் பிரார்த்தனை கட்டாயம்
பலன் தரும் கற்பக விருச்சம்!!
வாடிய பயிர் கண்டு வாடிய வள்ளலார் முதல்
மானுடம் தழைக்க தன்னையே தியாகம் செய்த
தெரேசா வரை அனைவருக்கும் பொது
பிறருக்காக வாழ் என்ற தாரக மந்திரம் தான்...!!!
தனக்கு என்னை செய்யவேண்டும் என்று நீ விரும்புகிறாயோ
அதை மற்றவருக்கு செய் என்று குரானும் கூறுகிறது...!!
மதங்களுக்கு அப்பாற்பட்டது தான் பிரார்த்தனை!!!
மனம் ஒன்றி நீ மற்றவருக்கு செய்யும் பிரார்த்தனை
மனித நேயத்தை உனக்குள் விதைக்கும்...! இதில்
மாற்று கருத்து கிடையாது...!!!
பிரார்த்தனை என்பது
பொருள் வேண்டியோ!!
வசதி வாய்ப்பு வேண்டியோ அல்ல!!
பாபர் செய்தது போல் ...
பிறர் உயிர் வாழ வேண்டி
பிரார்த்தனை செய்ய
கடவுளும் கண் திறப்பார்...!!!!

சதுரங்கம்.....

0 ரசித்தவர்கள்


சதுரங்கம்.....

வாழ்க்கை ஒரு சதுரங்கம் தான்...
கருப்பும் வெள்ளையும் கட்டங்கள் அல்ல
அவரவர் வாழ்வின் கருப்பு வெள்ளை பக்கங்கள்..!!!
நகத்தபடும் காய்கள் நமக்கு ஏற்படும் இன்னல்கள்...!!
இடையூறுகள் இருந்தாலும் சேதம் இல்லாமல்
காய் நகட்ட யாரும் இங்கு தயார் இல்லை...!!
இழப்புகள் இங்கே முக்கியம் இல்லை
வெற்றி பெற்றவர்கள் தான் இங்கே
முதல் மரியாதை...!!!
படைகள் முன்னேறி சென்றாலும்
பகடைகளை மரித்து வீழ்ந்தாலும்
சாதுர்யம் இங்கே முக்கியம்
சாணக்கியனாக இருந்தால் உனக்கு
சத்ரியனாக இருந்தால் எதரி உன்னை உதிரி ஆக்கிவிடுவான்!!
பலமும் பலவீனமும் கைகோர்த்து உன்னை
பந்தாடிவிடும்...!!!
எல்லாமும் தெரிய வேணும்....!!
கண்ணன் ஒரு சூத்திர தாரி!!!
மகாபாரத போர் ஒரு உதாரணம்..!!!!
மனங்கள் அங்கே ரணங்கள் ஆயின...!!
சத்தியம் ஜெயிக்க சாதுர்யம் தான் தேவை இருந்தது...!!!
சதுரங்கமும் அப்படிதான்!!!

தந்தை

0 ரசித்தவர்கள்


 தந்தை

என் வாழ்வின் எனக்கு முதல் அடையாளம் தந்த வள்ளல்,,!!
கண்டிப்பை கருவிலே வளர்த்தவர்..!
முறுக்கு மீசையும் மிடுக்கு பார்வையும்,,,!!!
பார்ப்பவர் நெஞ்சில் ஒரு மரியாதை தானாய் ஓட்டிகொள்ளும் ..!!
எங்களுக்கு இன்றும் இவர் மீது பயம் கலந்த அன்பு உண்டு..!!
மீசையும் பார்வையும் பார்த்து பயபடாதவர்  யாரும் இல்லை!!!
ஆனாலும் எங்களுக்கு இவர் ஒரு பொக்கிஷம்!!!
நன்மை எனபடுவது யாதெனின் தீது இல்லாத சொல் என்ற
வள்ளுவன் வாக்கை நெஞ்சிலே சுமந்தவர்...!!!
வெண்மை இவர் போடும் சட்டை மட்டும் அல்ல இவருடைய கையும் தான்!!!
பட்டாளத்தில் பணிபுரிந்ததால் எங்களுக்கு கதை சொல்லும் ஆசான்!!!
அவர் சொல்லும் கதை கேட்டு எங்களுக்கு தேச பக்தி உதிரத்தில் கலந்தது உண்மைதான்!!!
எனக்கு தெரிந்து அவரிடம் தெரியாத விஷயம் எதுவும் கிடையாது...!!!
பன்மொழி புலவர்....!!!
இசை கேட்டு ராகம் சொல்வதாகட்டும்!!!
ஆங்கிலப்புலமை கண்டு அயலாரும் இவரை தலைவணங்கிய காலம் உண்டு!!!
எனக்குள் இருக்கும் எனக்கு தெரியாத திறமையை
எனக்கே தெரியாது வளர்த்தவர்!!!
எழுத்துலகில் நான் பயணிக்கிறேன் என்றால் அதற்கு இவரும் ஒரு கர்த்தா!!
எல்லா புகழும் இறைவனுக்கே என்று அன்றே சொன்னவர் இவர்!!!
அதிகாலை பொழுதாகட்டும் அந்தி பொழுதாகட்டும் குளிர்ந்த நீரில் தான் தேகம் நனைப்பார்  !!!
தன்னை தானே வருத்தி பிறர் மகிழ மனம் கனிவார்!!!
எங்களுக்கு எல்லா நேரத்திலும் துணிவை புகட்டும்
துரோணர்    இவர் தான்!!!
இன்னுமொரு ஜென்மம் இருப்பின் இவர் மகனாக பிறக்கத்தான்
ஆசை எனக்கு!!!


அன்னை

1 ரசித்தவர்கள்
 

அன்னை 


என்னை இவ்வுலகுக்கு அறிமுகம் செய்தவள்!!!
எல்லை இல்லா கருணை கொண்டவள்!! அவள் 
உதிரத்தை   உணவாக எனக்கு கொடுத்தாள்!!!
என் மீது எப்போதும் கரிசனம் தான் அவளுக்கு....
கணவனை வரித்து நான் பொறந்ததாய் என்னிடம் கூறுவாள்!!!
என் நலன் குறித்து அவள் விசனபடுகையில் - அவள் நலனை
என்றும் அறியாள்!!
சவலை பிள்ளையாய் பிறந்தேனாம் அதையும் என்னிடமே சொல்லுவாள்..!
வாழ்கையில் எனக்கு அமைதியை கற்று தந்த அன்புள்ளம் அவள் தான்..!!
எல்லாவற்றுக்கும் மௌனத்தை மொழியாக சொன்னவள்!!!
நான் செய்யும் தவறுகளை தான் செய்ததாக நினைத்து
தன்னை வருத்தி கொள்வாள்!!!
தானத்தையும் நிதானத்தையும் எனக்கு கற்று கொடுத்தது அவள்தான்....!!
எனக்குள்ள எல்லா குணங்களும் அவளிடம் இருந்து தான்  இங்கே சங்கமித்தன !!
என் மனதில் ஒரே ஒரு ஆசை தான் !!!
 வயோதிகம் அவளை தாக்கும்போது - பூமியாக
நான் இருந்து தாங்க வேண்டும்--
அவள் தலை வைத்து படுக்க வசதியாக என் மடியை பூமெத்தை ஆக்கி
அவள் களிப்புற தூங்க தாலாட்டு பாட வேண்டும்!!!
சிறுவயதில் நான் செய்த குறும்புகளை எல்லாம் சகித்து
என் அறிவை வளர்த்து எனக்கு வாழ்வு தந்த தெய்வமே
உன்னை எப்படி பாராட்டுவது ??
போற்றி பாடி உன் புகழ் இவ்வையகம் பரவ
இந்த சேய் பெற்ற தாய் நீதான் என்று உன்னை பெருமை படுத்தி பார்க்க
ஆவலாய் உள்ளேன்!!!
தாமரையை பேராய் கொண்டவளே!!!
அம்மா என்ற அழைப்புக்கு
அவதாரம் தந்தவளே...
உன் அடி பணிந்தேன்....
சரணம் கோடி அம்மா....

Airtel Super Singer Jr. 2009 master ஸ்ரீகாந்த்

0 ரசித்தவர்கள்


Airtel Super Singer Jr. 2009
master ஸ்ரீகாந்த்

பிரம்மா தன படைப்பை
தவறில்லாமல் செய்தது இவனை மட்டுமே!!
சரஸ்வதி இவன் பால் அன்பு கொண்டு
இவன் நாவில் குடி கொண்டாள்!!!
இவனை ஈன்ற தாயும் இன்று
நிச்சயம் பெருமை கொண்டிருப்பாள்,

அரங்கமே கூடி இவனை வாழ்த்தி பேசும்போது
அவை அடக்கத்தோடு இவன் தலை தாழ்த்தி
நிற்கையில் மானுடமே மலைத்து தான் போனது...

நீ பிறக்கும்போதே வரம் வாங்கி வந்தவன்....
நீ அம்மா என்று சொன்ன வார்த்தை கூட
வள்ளுவன் குறளை ஈடு செய்து இருக்கும்...
பால பருவத்தில் அனைவரும் ஓடி விளையாடினால்
ஓரிடத்தில் அமர்ந்து இவன் அனைவரையும் ஓட வைக்கிறான்...
சொல் நயம் மிக அழகு ..
பேசும் பொற் சித்திரம் இவன்...
மூர்த்தி சிறிதாயினும் கீர்த்தி பெரிது...
இச்சொல் இவனுக்கு மட்டுமே பொருந்தும்...
தந்தைக்கு உபதேசம் செய்த தகப்பன் சாமி இவன்....
அட்சரம் பிசகாமல் இவன் உச்சரிப்பு
செம்மொழிக்கு இன்னும் அழகு...
"ல" "ழ" லகரம் ழகரம் எல்லாம்
இவனுக்கு சரளம் .....
இவனை பரிச்சயம் செய்துகொள்ள
இறைவனே பூமிக்கு வந்தாலும்
விந்தை ஒன்றும் இல்லை....
தேவதைகள் முன்னமே வந்து
இவனோடு போட்டி போட்டு
இவன் திறமையை பட்டை தீட்டுவது
இவன் செய்த பூஜாபலன்...
இவன் குரலால் இசையால்
இவ்வுலகை ஆளபோவது திண்ணம்...
இது என்னுடைய எண்ணம்....

12 வருடங்களுக்கு ஒரு முறை மலர்வது குறிஞ்சி
இவன் அதுபோல தான்
தவமிருந்து பெற்ற பிள்ளை இவன்.......
தவமே இவனை தவம் இருந்தது...


பலம்

0 ரசித்தவர்கள்


 பலம் 

இலைகள் இல்லா மரங்கள் பார்க்கும் போது.
எனக்குள் ஒரு சோகம் எட்டி பார்க்கும்...
யாருமில்லா தேசத்தில் தனித்து பயணிப்பது போல்..
அதுவும் ஒற்றை மரமாய் இருந்துவிட்டால்
நிராயுத பாணியாய் அது நிற்பதை பார்கையில்
அதன் சோகம் என்னையும் கவ்வும்...
கிளைகளை தாங்கி நிற்கும் மரத்திற்கு கூட
துளிர் விடும் பலம் இருக்கும் போது....
நமக்கு மட்டும் என் இல்லை இந்த சமன்பாடு...
பட்டு பட்டு துளிர்பதுபோல்
நாமும் அவ்வபோது நமக்குள் இருக்கும்
தீவினைக்க்ளை கலைந்தால் போதும்
புது பொலிவு நமக்கும் கிட்டும்...
சிரிபதால் மட்டும் நம் வயது குறைவதில்லை...
சிறப்பாக வாழ்வதால் மட்டுமே இது சாத்தியம்...
உயிர் என்பது அனைத்திற்கும் போது....
உணர்வும் அப்படியே.... 

பயணம்

0 ரசித்தவர்கள்

பயணம்
நெடிதூர பயணம் செல்ல
நெடுநாள் கனவு...
நினைத்து பார்கையில்
மானுட பிறவி கூட
பயணம் போல தான்...
மயானம் போகும் காலம் வரை
பயணித்து கொண்டு தான் இருக்கிறோம் ..
பயணிகள் மாறினாலும் பாதை என்றும்
மாறியதில்லை....
மைல்கற்கள் நம் வயதை அவ்வபோது
அறிய வைக்கும்...
அனுபவம் நம்மை நமக்கே பிரதிபலிக்கும்
ஆற்றல் இருக்கும் வரை
ஆவேசம் கரை கடக்கும்
ஆரழியாய் உருமாற
நமக்கு நாமே குழி வெட்டும்
அதிசயம் கூட நடந்தேறும்...
அமைதியாய் இருக்க
அருந்தவம் புரியவேணும்...
பகீரதனம் செய்தாவது
பணிவை புரிஞ்சுக்கணும்
பக்குவம் அடைந்துக்கணும்
நாடு நடப்பு போற தொட்டு
நாமளும் இருந்துக்கனும்...

உலக நாயகன்

1 ரசித்தவர்கள்

உலக  நாயகன்  
கருவறை இவனுக்கு நாடக மேடை...
கருவில் இருந்த சிசு நடனம் ஆடியதால்
கருவை சுமந்த தாய் பெருமிதம் அடைந்தாள் ...
கலைக்கு இவனே அதிபதி ஆவான் என்று
கமல் ஹாசன் என்று நாமம் சூட்டினாள்....
கல்வி கற்க பள்ளி சாலைக்கு போகும் சமயம்...
கலையை கற்க இவன் நாடக சாலைக்கு போனான்...
களத்தூர் கண்ணம்மா இவன் முதல் பிரவேசம்...
காண்பவர் எல்லாம் களிப்புற சாகசம் செய்தான்..
கலைக்கே இவன் புது அரிதாரம் பூசினான்!!
கலைத்தாய் இவனுக்கு அன்றே மகுடம் சூட்டினாள்...
கலையும் செருக்கும் ஒன்றென இருக்கும் என்பர்...
கலையை மட்டுமே இவன் கையாள்கிறான்...
கலைஞானி என்று வசிஷ்டர் வாயால் பிரம்மா ரிஷி....
கலைஞர் இவனுக்கு அளித்த காசோலை...
கதை கவிதை கருத்து என இவனுக்கு பன் முகம் உண்டு...
காலங்கள் மாறினாலும் கலைகள் அழிவதில்லை.....
கமல் ஹாசன் தனக்கென அடையாளத்தை
கருத்துடன் செதுக்கி விட்டான்...
கலையே இவனிடம் இனி கற்பதற்கு இல்லை என
கையை விரிக்கும் வரை இவன் கற்பதை நிறுத்த மாட்டான்...
கலையை இவன் தெய்வமாக பார்ப்பதால்
கரிசனம் கொஞ்சம் அதிகம் தான்....
கற்றோர் சபையில் இவன் ஒரு பல்கலை கழகம் .....
கற்பதற்கு இவனிடம் உள்ளது ஏராளம்..
காரணம் இவனிடம் இருக்கும் ஆர்வம்....!
காண கிடைக்காத ஒன்று இவுலகில் உண்டு எனில் - அது
கமல் ஹாசன் என்று நான் கூறுவேன்..
ஆயிரம் முறை தோற்றாலும்
அடுத்த முறை நிச்சயம் ஜெயிப்பேன் என்று
அகங்காரம் இல்லாது கூறுவான்....
அடுத்த தலைமுறைக்கு இவன் ஒரு
எடுத்து காட்டு...
இவன் காலத்தில் பயணித்தேன் என்பதே
எனக்கு கிடைத்த பெரும் பேறு......

ஒவ்வொரு தடையும் இவன் படிகற்களாய்  
மாற்றியே உயரம் ஏறுகிறான் 
மதத்தை பிடித்த மதத்தை மிதிக்கிறான் 
ஜாதிமத பேதமெல்லாம் சாபமாய் 
மனிதமாய் மலர்வதே வரமாய் 
நல்லுறவை நாடும் வல்லூராய் 
வானம் பறக்கிறான் .....!!!!

நட்பு

0 ரசித்தவர்கள்
நட்பு   
அரிச்சுவடி எழுதும் காலம் தொட்டு - என்
அருகாமையில் அமர்ந்து  - நீ
அன்பை பகிர்ந்து கொண்டாய் -
ஆசையாய் நீ தந்த எச்சில் மிட்டாயில்
என் நாவில் உன் சுவையை உணர்த்தியது...
ஏளனம் செய்யும் மற்றவரை பற்றி
ஒருபோதும் நீ புறம்  பேசியது இல்லை....
ஒவாமையால் நீ அவதிபட்டாய் !!
ஊசிகள் உன் உடம்பை சல்லடையாய் தைத்தது ....
ஒரு நாள் தீடிரென நீ காணாது போனாய்...
சாமியிடம் சென்றுவிட்டதாக அனைவரும்
ஒருசேர கூறினார்கள்....
அனைவர்க்கும் தெரிந்து சென்ற நீ
என்னிடம் மட்டும் எதுவும் கூறது சென்றுவிட்டாயே???
எப்போது வருவாய்??
உன் சுவை அரிய என் மனம் துடிக்கிறது...
தப்பாமல் வருவாயா??
இப்படிக்கு
செல்லிப்பன்
1 ம் வகுப்பு

நண்பன்

0 ரசித்தவர்கள்

நண்பன்

எனக்கு நன்றாய் ஞாபகம் இருக்கிறது...
தடித்த அட்டையுடன் கருப்பு கலரில்
உன்னை தொடும்போதே நமக்குள் ஏதோ ஒரு
உணர்வு ஏற்பட்டதே அப்போதே புரிந்து கொண்டேன் ௦
நீ என்னை அறிந்து கொண்டாய் என்று....
சித்திரம் கைபழக்கம் செந்தமிழ் நா பழக்கம் என்று தெரிந்த
சிந்தைக்கு புத்தகம் படிப்பது எப்பழக்கம் என்று ஏன் புரியவில்லை--?
சிரத்தையோடு உன்னை எடுத்து என் மடியில் வைத்து தாலாட்டு
பாடி மகிழ ஆசைப்பட்டு உனக்கு வலிக்காமல் ஓவொரு பக்கமாய்
பார்த்து பார்த்து படிக்கையில் நீ வெட்கத்தோடு மூடி கொண்டாய்
காற்றும் உனக்கு துணை போனது....
பக்கம் கிழிந்து விடுமோ என்ற பயத்தில் நான் அவசரமாக
ஜன்னலை மூடினேன்....
ஏளனமாய் என்னை பார்த்து நீ சிரித்தாய்...
அதுவும் எனக்கு ஞாபகம் இருக்கிறது....
என்னிடம் அப்படி என்னை இருக்கிறது என்று
என்னிடமே நீ உன்னை பற்றி தெரிந்து கொள்ள ஆசை பட்டாய்!!
என் நண்பன் வந்த போது உன்னை குறித்து சிலாகித்து கூறினேன்...
அவனும் உன்னை படிக்கும் ஆவலில் உன்னிடம் வந்தான்...
அவன் முகம் கொடுத்து நீ பேசவில்லை...
விடா பிடியாக அவன் என்னிடம் இருந்து உன்னை எடுத்து சென்றான்...
நாட்கள் ...மாதங்கள்....வருடங்கள்.....போயின....
உன்னை நான் மீட்டு வருவதற்குள் பெரும் பிரளயம் ஆயிற்று...
இனி ஒருபோதும் அந்த தவறை நான் செய்யமாட்டேன்...
நீ என்னுடனே இருந்து விடு...அது போதும் எனக்கு....!!!

வீட்டின் கேவல்

0 ரசித்தவர்கள்

வீட்டின் கேவல்
இடிந்து போன சுவர்களை பார்க்கும்போது - என்
இயலாமையும் கூடவே வருகிறது.....
வயோதிகம் வந்த உடன்
வியாதியும் என்னுடன் நட்பு கொள்கிறது,,,,
கட்டிய வீட்டை தொட்டு பார்த்து
கரிசனமாய் மனம் எண்ணுகையில் - என்
கையறு நிலை எனக்கே புரிகிறது...
நெடுநாள் பழகிய நண்பன்
மரித்து விட்டான் என செய்தி வந்தால்
மனம் பதறுமே அதை போல்
வித்து விட்ட இந்த வீட்டை பார்கையில்
கண்களின் ஓரம் ஈரம் கசிவதை என்னால்
தடுக்க முடியவில்லை....
மருத்துவம் பார்க்க எனக்கும்
வருமானம் பத்தவில்லை....
இதற்கு தான் என்னை இத்தனை சிறப்பாய் கட்டினாயா?
இடிந்துபோன வீட்டின் ஈன குரல் என் காதில்
ஒலிக்கையில்
என் இயலாமையை எண்ணி
என் மீதே எனக்கு கோவம் வருகிறது!!!

அன்னை மீனாக்ஷி

0 ரசித்தவர்கள்

அன்னை மீனாக்ஷி

அரைகால் சராய்  போட்டு
அவசர நடை நடக்கும் பொழுது முதல்
அன்ன நடை நடந்து வயோதிகனாகும் வரை
பல சமயங்களில் உன்னை கடந்து சென்றிக்கிறேன்
எப்போதும் நீ சிரித்த முகமாய் தான் எனக்கு காட்சி அளித்தாய்...ஏனெனில்
நீ தான் என் தாய் அல்லவா!!
சேய் பார்த்து சிரிக்காத தாய் உண்டா? -இப்புவியில்
தாய் அறியாத சேய் உண்டு .....
உன்னை கடந்து தான் சென்றேன் என்றேன் ஆனால்
உன்னை கண் கொண்டு பார்த்தது இல்லை....ஆனால் நீயோ
என்னை எப்போதும் கவனித்து கொண்டு தான் இருக்கிறாய்
என் மீது உனக்கு இருக்கும் அக்கறை யார் சொல்லி வந்தது?
உலகாளும் உமையாளே  - உன்னை காண நேரம் கூட இல்லாது
அலுவலாய் நான் அலைந்து திரிந்து பராரியாய் போனேன் ...
துன்பம் ஒன்று இல்லாது இருந்தால் மாய உலகத்தில் உன்னை
நினைத்து பார்க்கும் மனங்கள் எது?
இவ்வளவு சொல்லும் நானே கூட
இடர் வரும் பொழுது தானே உன்னடி பணிகிறேன்
என்னை சுயநலவாதியாக எண்ணிவிடாதே !!!
என்னை நீ  காப்பாற்றி விட்டாய்....என்னால் இவ்வுலகை காண
என் சிசுவை காப்பாற்ற  உன்னை விட்டால் யார் இருக்கா எனக்கு??
நீயே வழி சொல் அதற்கு...

காலம்

0 ரசித்தவர்கள்

 காலம்
காலம் அனைவருக்கும் பொது...
கடந்த காலம்
நிகழ காலம்
எதிர் காலம் என வகை படுத்தி வைத்து
கால தேவன் கூட அறியாத
கடிகாரங்கள் பல எனக்கு கிடைத்தது
அரிய வகை கடிகாரங்கள் என
அத்தனையும் இணைய தளத்தில்
இடர் இல்லாது தேடி தேடி
நான் வாங்கிய கடிகாரத்தை
நான் பார்க்க நினைக்கையில்
கால தேவன் நேரம்  பார்த்து
என்னுயுரை கவர்ந்திட்டான்
அனைவரும் வந்து போயினர்
சாவு சரியாக 3 30 மணிக்கு என
என் மணி பார்த்து சொல்லினர்...
 காலையா? மாலையா?
அதை யார் சொல்வது??
நான் தான் வருணுமா??