காதல் படிக்கட்டுகள்



காதல் படிக்கட்டுகள்

முதல் முதலாய்
எனக்குள் ஏற்பட்ட அந்த உவகை
இதுவரை நான் அறியாதது.....

பள்ளி இறுதி ஆண்டு என்று எண்ணுகிறேன்...
பருவம் என்னை பரிசோதனை செய்த காலம்....
அரை கால் சராய் போட நான் அடம் பிடித்த தருணம்....
இன்று நினைவுக்கு வந்தாலும் எனக்குள் ஏற்படும் வெட்கம்....
இவள் எனக்காக தான் பிறந்திருக்கிறாள் என்ற கர்வம்....
என் அருமை அக்காவின் அருந்தவ புதல்வி அவள்....
உறவுக்குள் உறவு சொல்லி வளர்ந்த உன்னதமான பொழுது .....
அவள் பூபெய்தினால் என்ற செய்தி வந்ததும் ......
அறை கண்ணாடியில் என் முகம் பார்த்து
நாசிக்கு கீழே என் கைவிரல் கொண்டு தடவி விட்டு
நான் வளர்ந்து விட்டதாக எண்ணிக்கொண்டேன்....

முறை செய்ய அழைக்கும்போது முரண்டு செய்து...
தயக்கத்தோடு அவள் முகத்தில் சந்தனம் பூசுகையில்...
அவள் முகம் நாணி வெட்க சிரிப்பு சிரித்தாள்......
அன்று தான் தன்னியனானேன்.....
இவையெல்லாம் எண்ணி பார்கையில்
இதுவும் காதலால் என்று
மிக தாமதமாக தான் எனக்கு புரிந்தது...
வருடங்கள் விளையாட்டுபோல் ஓடி போயின...
அக்காவின் மரணம் என்னை மொத்தமாக புரட்டி போட்டது...

மாமனின் மறுபக்கமும் எனக்கு தெரிய வந்தது....
மறுமணம் என்பது தனக்காக தான் என்று....
திருமணம் செய்து கொண்டான்....அக்..
குண்டத்தில் என் காதலையும் சேர்த்து பொசுக்கி விட்டான்....
இன்றும் நான் அவளை தான் உளமார நேசிக்கிறேன்....
முதல் முதலாய் வந்த அந்த காதல்
முற்று பெற்று போனதால் .......
இன்று காதல் என்பது என்னை பொறுத்தவரை....
கானலாய் தெரிகிறது....

0 Response to "காதல் படிக்கட்டுகள்"