நண்பன்
எனக்கு நன்றாய் ஞாபகம் இருக்கிறது...
தடித்த அட்டையுடன் கருப்பு கலரில்
உன்னை தொடும்போதே நமக்குள் ஏதோ ஒரு
உணர்வு ஏற்பட்டதே அப்போதே புரிந்து கொண்டேன் ௦
நீ என்னை அறிந்து கொண்டாய் என்று....
சித்திரம் கைபழக்கம் செந்தமிழ் நா பழக்கம் என்று தெரிந்த
சிந்தைக்கு புத்தகம் படிப்பது எப்பழக்கம் என்று ஏன் புரியவில்லை--?
சிரத்தையோடு உன்னை எடுத்து என் மடியில் வைத்து தாலாட்டு
பாடி மகிழ ஆசைப்பட்டு உனக்கு வலிக்காமல் ஓவொரு பக்கமாய்
பார்த்து பார்த்து படிக்கையில் நீ வெட்கத்தோடு மூடி கொண்டாய்
காற்றும் உனக்கு துணை போனது....
பக்கம் கிழிந்து விடுமோ என்ற பயத்தில் நான் அவசரமாக
ஜன்னலை மூடினேன்....
ஏளனமாய் என்னை பார்த்து நீ சிரித்தாய்...
அதுவும் எனக்கு ஞாபகம் இருக்கிறது....
என்னிடம் அப்படி என்னை இருக்கிறது என்று
என்னிடமே நீ உன்னை பற்றி தெரிந்து கொள்ள ஆசை பட்டாய்!!
என் நண்பன் வந்த போது உன்னை குறித்து சிலாகித்து கூறினேன்...
அவனும் உன்னை படிக்கும் ஆவலில் உன்னிடம் வந்தான்...
அவன் முகம் கொடுத்து நீ பேசவில்லை...
விடா பிடியாக அவன் என்னிடம் இருந்து உன்னை எடுத்து சென்றான்...
நாட்கள் ...மாதங்கள்....வருடங்கள்.....போயின....
உன்னை நான் மீட்டு வருவதற்குள் பெரும் பிரளயம் ஆயிற்று...
இனி ஒருபோதும் அந்த தவறை நான் செய்யமாட்டேன்...
நீ என்னுடனே இருந்து விடு...அது போதும் எனக்கு....!!!