பஞ்சம் பிழை


பஞ்சம் பிழை

கண்ணனை பாடிய பாரதியை அறியாதவர் யாரிங்கு...
பாசுரம் பாடிய ஆண்டாள் பற்றி தெரியாதவர் யார் இருக்கா?
பதியம் பாடிய அனைவரும் ஆண்டவன் அடி பணிந்தவர்கள்   தான்...

என் நிலை வேறு....
நான் இன்றும் அவள் புராணம் தான் பாடுகிறேன் ...ஆனால்
என்னை மட்டும் ஏனிங்கு பைத்தியமாய் பார்கிறீர்கள்??
கவிதை எழுதும் அனைவரும் கவி ஆவதில்லை ...
முத்துக்களில் எது நல் முத்து என்று எவரும் ஆராய்ச்சி பண்ணதில்லை?
பெற்ற பிள்ளையை விட
பொக்கிசமாய் நான் நினைக்கும் முத்துக்கள்
என் கவிதை மட்டுமே!!!
கடை விரிக்க வந்து விட்டேன்...
எடுப்பார் இங்கு யாரு மில்லை...
கவிதை எழுதி பரிசல் பெற நான் ஒன்றும் ராஜ்யத்தில் இல்லை ....
கை வைத்ததால் பெருக்கெடுத்து ஓடிய வைகை தண்ணீர் குடித்தவன் நான்.....
முதல் இடை கடை என முத்தமிழ் சங்கம் வளர்த்த மதுரை மைந்தன் .....
செருக்கை சிரசொடு கொய்து
செம்மொழியாம் இத்தமிழ் பாடி
சிங்கார சென்னைக்கு
பஞ்சம் பிழைக்க வந்தேன்....
வந்தாரை வாழ வைக்கும் தமிழகம் இந்த
வைகை மைந்தனையும் வாழ வைத்தால் சரி!!!

0 Response to "பஞ்சம் பிழை"