பனித்துளி...

 

பனித்துளி...


இரவில் ஜனித்து
நிலவுடன் உறவாகி...!!!
பகலவன் காலனாய்....
எங்கள் உயிரை துச்சமென எடுத்து..!!
எத்தனை முறை சென்றாலும்....!!
வெட்ட வெட்ட வளரும் நகம் போல்...!!
ஜனித்து கொண்டே இருப்போம்...!!
பூவின் வாசனை நாங்கள் அறியாததா??
அல்லியும்  மல்லியும் எங்கள் ஆருயிர் தோழிகள்!!
பூக்களுக்கு ஆடை போட்டு அலங்காரம் செய்கிறோமே...!!
அது பொறுக்கவில்லை இந்த சூரியனுக்கு...!!!
மேகங்கள் சூழ்ந்தாலும்
வாயு தேவன் விரட்டி விடுகிறான்...!!
எங்கள் ஆயுளை நீட்டிக்க
ஆதரவு தருவதற்கு ...
யாரும் இலர்...
எத்தனை முறை எரிந்தாலும்...
இறக்கை முளைத்த பீனிக்ஸ் போல்..!!!
நாங்களும் மடிந்து போனாலும்...
மீண்டும் மீண்டும் ஜனிப்போம்...
சூரியனை தொடும் தூரம்
வெகு தூரம் இல்லை...
அந்த பீனிக்ஸ் பறவைக்கு...!!! அதே  போல்  -
கர்ணனுக்கு கவச குண்டலம் போல்...!!
எங்களுக்கும் ஏதாவது கவசம் வையுங்கள்!!!
மனிதருக்கு மட்டும் தான் பாதுகாப்பா?
மரித்து போகும் எங்களுக்கு இல்லையா??
கொஞ்சம் யோசியுங்கள்...1 Response to "பனித்துளி..."

  1. hemikrish Says:

    really superb......so cute lines