தனிமை


 தனிமை 


என்னை தேடிய போது                         
தொலைந்து போன என் நினைவுகளும் கூட வந்தது...
மரத்தின் நிழலில்
நிழலின் மடியில்
சிரித்த முகமாய் உன் பிம்பம் ....
இன்றும் நினைக்கயில் பித்தம் தலைக்கு ஏறுவதை
தடை செய்ய யாரும் இல்லை....

வாங்கி வைத்த பண்டங்களை
வகையாய் நீ கொடுக்க...
கரம் கொண்டு நீட்டுகையில் உரசும் உன் விரல்கள்
சொன்ன ரகசியங்கள் யார் அறிவார்....
உதிர்ந்து போன இலைகளாய்
என் நினைவுகள்
மரங்கள் பட்டு பின் துளிர்க்கும்....
விட்டு போன நம் உறவை சொல்ல
விதியத்து  போனேன் நான்...?

2 Response to "தனிமை"

 1. selina Says:

  தனிமை நிலையானது அல்ல,,,, இனிமையானதும் அல்ல,,,,
  தனிமையின் தாக்கத்தில் உருவாகும் ஏக்கங்கள்,,,,
  இனிமையான கவிதை

  வாழ்துக்கள்

 2. ramabalaji Says:

  all r amazing line....