இசை
"அம்மா" என்ற வார்த்தைக்கு
அகிலமே நடனம் ஆடும்...!!
அதை போல் தான் இசைக்கும்....!!!
இசைக்கு மயங்காதார் யார் இங்கு?
இனம் மொழி மதம் அனைத்தையும்
இல்லாது செய்யும் ஒரே சாதனம் இசை மட்டுமே!!!
இசைக்கு பாகுபாடு கிடையாது...!!
உலகளாவிய உண்மையும் இதுதான்!!!
ஐந்து அறிவு கொண்ட மிருகத்தை கூட
ஆட்படுதிவிடும் ஆற்றல் இசைக்கு மட்டுமே!!
குழல் இசை கேட்டு பசுக்கள் சிலையாய் நின்ற
காதை காவியத்திலும் உண்டு....
தாலாட்டு இசை கேட்டு தூளியில்
தூங்கும் மழலை இன்றும்
தரணியில் உண்டு....!!
இசையில் ஸ்ருதிபெதமாய் இருந்தாலும்!!
அதுவும் இசைதான்...!!!
இசையின் மொழி அறிந்தோர்
இறைவனை கூட அருகில் அழைக்கலாம்!!!
ஈசன் கூட இதற்கு உதாரணம்...!!!
ஸ்வரங்கள் ஏழு என கேள்வி...
அருவியாய் கொட்டும்
அள்ள அள்ள குறையாத
அட்சய பாத்திரம் ......
பாமரன் முதல் படித்தவர் வரை
அனைவர்க்கும் பரிச்சயம் இசை ...!!!
கலை வாணியின் வரம்
கலைஞன் சொத்து...இசை மட்டுமே!!!
செல்வத்தை போல் இடம் பெயராது...!!!
இவ்வளவு ஏன்?
இசைக்கு உருகாதார்
இவ்வுலகில் இலர்!!!
December 30, 2009 at 1:26 AM
ithu ARUMAI.....nalla irukku..congrats
January 7, 2010 at 2:16 PM
கவிதை வானிலையரிக்கை போல் இருந்தாலும்
கரு( இசை )மழை என்பதால்
குளிர்ச்சி....கணகளில் மட்டுமல்ல......காதினிலும்